சவுண்டல்

                ஆண்டு முழுவதும் பசுந்தீவன விளைச்சலைத் தரும் மரத்தீவனப் பயிர்.


நிலம் தயார் செய்தல்

               நிலத்தை 2 -3முறை நன்கு உழவு செய்ய வேண்டும். பின்பு 6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.


விதைப்பு

                ஒரு ஹெக்டருக்கு 10 கிலோ விதை விதைக்க வேண்டும்.


நீர் மேலாண்மை

                மரம் பெரிதாகும் வரை நீர் பாய்ச்ச வேண்டும். அதனால் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.


பயிர் பாதுகாப்பு

                 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு மாதம் 2 அல்லது 3 முறை தெளிப்பதன் மூலம் வேர்க்கரையான்,வேர்ப்புழுவைக் கட்டுப்படுத்தலாம்.


                 பஞ்சகவ்யா கரைசலை நீர்பாசனத்துடன் கொடுக்கும் போது எந்த வித பூச்சி தாக்குதலும் இருக்காது. இதனால் தரமான பசுந்தீவனத்தை மாட்டிற்கு கொடுக்கலாம்.


அறுவடை

                 விதைத்த 6 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்யலாம். அடுத்தடுத்து 45-60 நாட்களில் அறுவடை செய்யலாம்.

கருத்துகள் இல்லை