ஊறுகாய் புல்
பசுந்தீவனம் அதிகம் கிடைக்க கூடிய காலத்தில் அதை வீணாக்காமல் பதப்படுத்தி சேமித்து வைக்கும் முறைக்கு ஊறுகாய் புல் எனப்படும். இந்த முறையில் பசுந்தீவனத்தை தரைக்கு கீழ் வட்டமான அல்லது சதுர குழிகள் வெட்டி சேமிக்கலாம்.
நிலத்தில் சுமார் 2 முதல் 3 மீ ஆழத்திற்கும், 3 முதல் 4.5 மீட்டர் அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும். குழியின் பக்கவாட்டிலும் அடித்தளத்திலும் நன்கு காய்ந்த வைக்கோலை அல்லது காய்ந்த புற்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
குழியில் காற்றில்லாமல் நறுக்கிய பசுந்தீவனங்களை அடுக்கு முறையில் அடுக்க வேண்டும்.
ஒரு அடுக்கில் 200 கிலோ தீவன துண்டுகளை நிரப்பி நன்றாக அழுத்தி மிதித்து விடவேண்டும்.
வெல்லப்பாகு கழிவை இந்த அடுக்கின் மீது தெளித்து விட வேண்டும். பின்பு 3கிலோ உப்பை தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் அல்லது உப்பை மட்டும் தூவலாம்.
இப்படி ஒவ்வொரு அடுக்கும் நிரப்பிய பின்னர் மேல் அடுக்கில் காய்ந்த வைக்கோலை வைத்து நிரப்ப வேண்டும். 10 கிலோ மண்சேறுக்கு 1 கிலோ சாணம் என்ற அளவில் கலந்து அதனை வைக்கோலின் மேல் பூசி முழுகி விட வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட தீவனத்தை 3 மாதங்கள் வரை வைத்து அதன் பின் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஊறுகாய் புல் நன்மைகள்
கோடைகாலத்தில் பசுந்தீவனம் கிடைக்காத சமயத்தில் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தை மாட்டிற்கு கொடுக்கலாம்.
மழைக்காலத்தில் அதிகமாக விளையும் பசுந்தீவனங்களை பதப்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் தீவனம் வீணாவதை தடுக்கலாம்.
பதப்படுத்துவதன் மூலம் தீவனத்தில் புரதம் மற்றும் உயிர்ச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் தீவனம் சேமிப்பதற்கான இடத்தை காட்டிலும், ஊறுதீவனக் குழிகள் குறைந்த இடஅளவில் தீவனக்கிடங்காக இருப்பதால் எந்த இடத்திலும் தீவனத்தை சேமிக்கலாம்.
கருத்துகள் இல்லை