கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. ′ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது′ என்றார் திருவள்ளுவர்.

              அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

               அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் மகத்துவம்.

                பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

                மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர்.

                அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பார்கள். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, வீர நடை நடக்க வைப்பர்.

                பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு அங்க வஸ்திரம் போர்த்தி, மரியாதை செய்வார்கள்.

                ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! எனவே அதன் வீரத்தை போற்றி வளர்ப்பதே விவேகமான செயலாகும்.

மாட்டுப் பொங்கல்

கருத்துகள் இல்லை