இந்நோய், இளங்கன்றுகளைத் தாக்கி அதிக அளவு உயிர்ச்சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கால்நடைகளின் குடலில் உட்பகுதியிலுள்ள மெல்லிய சவ்வு போன்ற படலத்தின் அழற்சி காரணமாக கால்நடைகளுக்கு கழிச்சல், இரத்தத்துடன் கூடிய கழிச்சல், வயிற்று வலி போன்ற பல்வேறு தீங்குகள் ஏற்படுகிறது.

               அதுமட்டுமல்லாமல் மாடுகளுக்கு உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை, அமில-கார சத்துகளின் சரிவிகிதம் மாறுதல் போன்ற கோளாறுகள் காரணமாகவும் ஏற்படுகின்றன.

                கால்நடைகளுக்கு குடல் நோய் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா, வைரஸ், குடற்புழுக்கள் மற்றும் இரசாயன பொருட்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது.

அறிகுறிகள்

கழிச்சல்

              மாடுகளின் சாணம் மென்மையாகவும், திரவமாகவும் காணப்படும் மற்றும் அதிகம் துர்நாற்றம் அடிக்கும்.

              மேலும் மாடுகளின் சாணத்தில் இரத்தம், கோழை மற்றும் மண் போன்ற பொருட்கள் காணப்படுதல்.

              மாடுகளின் தொடைப்பகுதியில் சாணம் ஒட்டியிருத்தல்.

தடுப்பு முறைகள்

                தரை எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும். நோயுற்ற கன்றுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும். தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டி மிகவும் சுத்தமாக இருக்கவேண்டும்.

               சுத்தமான மற்றும் நல்ல தீவனம் உண்ணும் கால்நடைகளை இந்நோய் அதிகம் தாக்குவதில்லை.

கழிச்சல் | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை