மாட்டிற்கு அலங்காரம்

               கால்நடைகளை அழகுப்படுத்தும் வகையில் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, மாடுகளின் கொம்புகளுக்கு பளபளக்கும் வண்ணம் பூசி, கொம்பில் குஞ்சம் கட்டி, கழுத்தில் சலங்கை கட்டி அழகுப்படுத்தி, நெற்றியில் திருநீறு பூசி, குங்குமப் பொட்டிட்டு, புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்தும் அழகுப்படுத்துவார்கள்.

பொங்கல் வைக்கும் முறை

                மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து கோலம் இட்டு, அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கடவுளை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் “பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்!” என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இட்டு பொங்கல் வைப்பர். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை