இரகம்
CO5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC - 287 மற்றும் உள்ளுர் வகைகள். கோ5 ( இந்த ரகமானது பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது. வருடம் முழுவதும் பயிரிடலாம்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு 6 டன் என்ற அளவில் மக்கிய தொழு உரம், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இட்டு உழவேண்டும்.
விதை
ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதை விதைக்கவேண்டும்.
நீர் மேலாண்மை
விதை விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சினால் போதுமானது, நன்கு வளரும்.
பயிர் பாதுகாப்பு
100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம், 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம்.
அறுவடை
விதைத்த 55-60நாட்களில், பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை