ஜோனீஸ் கழிச்சல் நோய்
மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவினால் இந்நோய் பரவுகிறது. வயதான மாடுகளை இந்நோய் அதிகம் பாதிக்கிறது.
அறிகுறிகள்
இளங்கன்றுகளை தாக்கி அவற்றின் குடலில் தங்கி 2-5 வயதில் தான் அதன் அறிகுறி தென்படுகிறது.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
கறவை மாடுகளில் பாலின் அளவு குறையும்.
தடுப்பு முறைகள்
இந்நோயின் அறிகுறிகள் கண்டறிவது எளிதல்ல. அதனால் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
பாதிக்கப்பட்ட மாடுகளை தனிக் கொட்டகையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
சுத்தமான தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.
லெப்டோ நோய்
இந்நோய் லெப்டோஸ்பைரா பொமோனா என்னும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயின் முக்கிய பாதிப்பு கருச்சிதைவு ஆகும்.
அறிகுறிகள்
சிறுநீர் வெளியேறும் போது மஞ்சள் நிறத்தில் இரத்தம் கலந்து இருக்கும்.
பாதிக்கப்பட்ட கறவை மாடுகளில் பால் கறக்கும் போது கெட்டியாகவும், இரத்தம் கலந்தும் வரும்.
பாதிக்கப்பட்ட மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.
தடுப்பு முறைகள்
மாடுகளுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக சினை ஊசி போடுவதற்கு முன் தடுப்பூசி போடுவது நல்லது.
கருத்துகள் இல்லை