கன்றுகளை கொட்டைகையில் வைத்து பராமரிக்கும் போது ஒரே வயதுடைய கன்றுகளை மட்டுமே ஒரே அறையில் வைத்து பராமரிக்கலாம்.
ஒவ்வொரு கன்றுகளுக்கும் தேவையான இட வசதியை ஏற்படுத்தி தருவது சிறந்தது.
பெரும்பாலும் கன்றுகள் மழை மற்றும் குளிர்காலங்களில் இறக்க நேரிடலாம். அதனை தவிர்க்க மழை மற்றும் குளிர் காலங்களில் கொட்டகை ஈரமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதாவது கொட்டகையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். குளிர்க்காலத்தில் வைக்கோலினை பரப்பி அதன்மீது கன்றுகளை படுக்க வைக்க வேண்டும். கோணிப்பைகளை கொண்டும் கன்றுகளை போர்த்தி பாதுகாக்கலாம்.
கன்றுக்கழிச்சல், சளி, மலச்சிக்கல், தோல்நோய் போன்றவற்றிற்கு தாமதமாக சிகிச்சை அளிப்பதனால் இறப்பு ஏற்படலாம்.
கன்றுகளுக்கு 1 வயது வரை அவ்வபோது குடற்புழு நீக்கம் செய்வதால் அவற்றின் இறப்பை தவிர்க்கலாம்.
கன்றுகளுக்கு அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ பால் அளிப்பதனாலோ, நேரடியாக மாட்டுத்தீவனத்தை அளிப்பதனாலோ இறப்பு ஏற்படலாம். எனவே கன்றுகளுக்கு ஏற்ப தீவனங்களை அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை