அடர் தீவனத்தை திடீரென்று மாற்றக்கூடாது. அதேபோல் பயறுவகை தீவனத்தை மட்டுமே கொடுக்க கூடாது. இப்படி செய்தால் வயிறு உப்புசம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் பழைய அரிசி சாதம், அழுகிய வாழைப்பழம், அரிசி, கோதுமை, தானியங்கள் அதிக அளவில் சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஏற்பட்டு இறந்து விடும்.
இவைமட்டுமல்லாமல் உள்வயிறு சுழன்று கொள்வதாலும், புளித்த உணவை அதிகமாக உட்கொண்டாலும், உண்ட பின் அதிகம் தண்ணீர் குடிப்பது ஆகியவற்றாலும் வயிறு உப்புசம் ஏற்படலாம்.
அறிகுறிகள்
மூச்சு விட சிரமப்படுதல், வலியின் காரணமாக பற்களைக் கடித்தல், வாய் மூலம் மூச்சு விடுதல், வயிற்றுப்பகுதி முழுவதும் உப்பிக் காணப்படும், மாடு நடக்க சிரமப்படுதல், அடிக்கடி படுத்து எழுந்திரித்தல், தரையில் உருளுதல், வயிற்றை நோக்கி அடிக்கடி உதைத்துக் கொண்டிருத்தல், நாக்கை வெளியே தள்ளிக் கொண்டு தலையினை நீட்டிக் கொண்டு இருத்தல், உணவு அசைக்கு வராமல் இருத்தல் ஆகியவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.
மருத்துவம்
இதற்கு கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 1 லிட்டர் ஊற்ற வேண்டும். அல்லது எண்ணெயுடன் சோப்புத் தண்ணீர் 250 மில்லி கலந்து ஊற்ற வேண்டும். அல்லது 100 கிராம் சமையல் சோடாவை 500 மில்லி தண்ணீரில் கரைத்து 2 அல்லது 3 முறை ஊற்ற வேண்டும். மருந்து ஊற்றும் போது புறை ஏற்படாமல் கவனமாக நீண்ட குழாய் கொண்டு ஊற்ற வேண்டும்.
வயிறு உப்புசம் அதிகமானால் மாடு மூச்சுவிட சிரமப்படும். தாமதிக்காமல் உடனே மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை