பாலின் தேவையானது அதிகரிக்க அதிகரிக்க கறவை மாடுகளின் தேவையும் அதிகரிக்கிறது. வீட்டிற்கு ஒரு மாடு வாங்குவதாக இருந்தாலும், பண்ணை வைக்க கறவை மாடுகள் வாங்குவதாக இருந்தாலும் நல்ல கறவை மாடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு செய்யும் வழிமுறைகள்

                 முதலில் மாடுகளை பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

                  தோற்றத்தைக் கொண்டும், குணாதிசயங்களை கொண்டும் பசுக்களை தீர்மானிக்கலாம். பசுவின் கண்கள் பிரகாசமாகவும், சுறுசுறுப்பாகவும், கருவிழி நன்கு அசையும் வண்ணமும் இருக்க வேண்டும்.

                 பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு தோல் செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.

                மூக்குத் துவாரங்கள் பெரியதாகவும், மூக்கின் முன்பகுதி ஈரமாகவும் இருக்க வேண்டும். மூச்சு விடும் பொழுதோ அல்லது உள்ளிழுக்கும் பொழுதோ குறட்டைச் சப்தம் வரக்கூடாது.

                பசுவை பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் முன்னங்காலின் பகுதியை விட பின்னங்கால் பகுதியில் உடலளவு பெரிதாக இருந்தால் தீவனத்தை நன்கு உட்கொண்டு பாலாக மாற்றும் திறன் உடையது என்பதை அறிந்து கொள்ளலாம்.

               அதேபோல் பல் வரிசை தேய்மானம், சொத்தைப் பல், புண் மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. மாடுகள் ஓய்வு நேரங்களில் அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

               முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.

               கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். பின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல் வேண்டும்.

               மாடுகளின் வயதை பற்கள் முளைத்தல், பற்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் கொம்புகளில் ஏற்படும் வளையங்களை வைத்து தோராயமாக நிர்ணயித்து விடலாம்.

               பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். மடியின் நான்குக் காம்புகளும் ஒரே அளவாகவும், சரிசமமாகவும் இருக்க வேண்டும். மேலும் காம்புகளின் நுனியில் பால் வரும் துவாரம் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

              கறவை மாடுகள் அதிக கொழுப்புடனோ அல்லது அதிகமாக மெலிந்தோ இருக்கக் கூடாது. மாடுகளின் விலா எலும்புகளில் கடைசி மூன்று எலும்புகள் மட்டும் தெரிவது நல்லது.

             பசுவின் மேல் பகுதியைப் பார்க்கையில் முன்னங்கால் பகுதியிலிருந்து இரு பக்க இடுப்பு எலும்பு வரையில் வரும் நேர்க்கோட்டில் இரு பக்கமும் விரிவடைந்திருக்க வேண்டும். அதன்படி, இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் கன்று போடுவதில் எந்த சிரமமும் இருக்காது.

              பால் மடியானது உடலோடு நன்கு ஒட்டியிருக்கவும், மடி உடலோடு சேரும் பகுதி அகன்று விரிந்தும் அடிவயிற்றில் நன்கு திரண்டும் இருக்க வேண்டும்.

              மாடுகள் முதல் கன்று ஈற்றைவிட இரண்டாவது மற்றும் மூன்றாவது ஈற்றில்தான் அதிகமாக பால் இருக்கும். எனவே, முதல் மூன்று ஈற்று இருக்குமாறு மாடுகளை பார்த்து வாங்குவது நல்லது.

கறவை மாடுகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

கருத்துகள் இல்லை