இந்நோயானது கறவை மாடுகள் மேயும்போது கூர்மையான பொருட்களான ஆணி, கம்பி மற்றும் இதர இரும்பு போன்ற பொருட்கள் தவறுதலாக புற்களுடன் சேர்ந்து விழுங்கி விடுவதால் ஏற்படுகிறது.

               இந்த மாதிரி கூர்மையான பொருட்கள் வயிற்றுக்குள் செல்வதால், ரெட்டிக்குளம் எனப்படும் மாடுகளின் இரண்டாம் வயிற்றுக்குள் சென்று அதனை துளைத்து குடலைச் சுற்றியுள்ள சவ்வை துளைத்துப் பின்பு இதயத்தை துளைத்து நோய் ஏற்படுகிறது.

               சினையுற்ற மாடுகள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகள் பிழைப்பது மிகவும் கடினமாகும்.

அறிகுறிகள்

                இரும்புப் பொருட்களை உண்ணுவதால் காய்ச்சல், தீவனம் உட்கொள்ளாமை, மாடுகளின் முதுகு வளைந்து, மடக்கிய முன்கால்களுடன் நிற்பது மற்றும் பால் உற்பத்தி குறைதல் போன்ற காரணங்களை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

                நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் இரத்த நாளங்களில் கைகளால் அழுத்தம் கொடுக்கப்படும் போது கைகளுக்கு இரண்டு புறமும் இரத்தம் தேங்கும். நோய் பாதிப்பற்ற மாடுகளில் அழுத்தம் கொடுக்கப்படும் கையின் ஒரு புறம் மட்டுமே இரத்தம் தேங்கும்.

தடுப்பு முறைகள்

                தீவனத்துடன் இரும்புப் பொருட்கள் மற்றும் கூர்மையான பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

                மேலும் பண்ணை மற்றும் மாடு மேய்ச்சல் செல்லும் இடங்களில் இரும்புப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

                நோய் அறிகுறி தெரிந்தவுடன் தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரைக் கொண்டு மாடுகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் முற்றிய நிலையில் இருந்தால் பாதிக்கப்பட்ட மாடுகள் பிழைப்பது கடினம்.

மாடுகளின் வயிறு மற்றும் குடல் சவ்வில் ஏற்படும் அழற்சி | அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை