கங்காகுளியலுக்குப் பின்பு எதையும் சாப்பிடுவதற்கு முன்பாகத் தீபாவளி மருந்தை சாப்பிட வேண்டும்.

                 தீபாவளியன்று, இனிப்பு மற்றும் பிற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால் ஏற்படும் வயிற்று வலிகள் மற்றும் செரிமானமின்மை போன்றவைகளை இந்தத் தீபாவளி மருந்து அகற்றிவிடும்.

                 இந்த மருந்தைத் தயாரிக்க சுக்கு, சீரகம், ஓமம், பூண்டு, பனங்கற்கண்டு (கருப்பட்டியும் பயன்படுத்தலாம்), சிறிது நெய் போன்றவை தேவைப்படுகின்றன.

                 சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டு போன்றவற்றை நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

                வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் பனங்கற்கண்டை (கருப்பட்டி) பொடித்துப் போட்டு மெதுவாகக் கிளறவேண்டும்.

                அந்தக் கரைசல் சர்க்கரைப்பாகு போன்ற நிலைக்கு வந்ததும், அதில் இடித்து வைத்திருக்கும் சுக்கு, சீரகம், ஓமம் மற்றும் பூண்டுக் கலவையைப் போட்டு கிளற வேண்டும்.

                கலவை இறுகி வந்ததும் அதில் சிறிது நெய்விட்டு இலேசாகக் கிளறி இறக்கிவிட வேண்டும். இதுதான் தீபாவளிமருந்து.

               இந்தத் தீபாவளி மருந்தை வீட்டிலிருக்கும் சுமங்கலிப்பெண்களில் பெரியவராக இருப்பவர் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் வழங்கவேண்டும்.

தீபாவளி மருந்து

கருத்துகள் இல்லை