கன்று பிறந்தவுடன் அவற்றை தாயிடமிருந்து பிரித்து வளர்ப்பதே இந்த முறையாகும்.
இந்த முறையினால் கன்றுகளுக்கு அதன் தாயும், தாய் மாட்டிற்கு அதனுடைய கன்றும் தெரியாமல் வளர்க்கலாம்.
மேலும் சீம்பால் குடிக்க வைத்து 4 வது நாட்களில் அவற்றின் தாய்களிடமிருந்து பிரித்துவிட வேண்டும்.
கன்றுகளை பிறந்த உடனே பிரிப்பது நல்லது. ஏனெனில் அப்போதுதான் அவற்றிற்கு தாயிடமிருந்து பிரியும்போது ஏற்படும் தவிர்ப்பை தவிர்க்க முடியும்.
இவ்வாறு பிரித்த கன்றுகளுக்கு பாத்திரத்தில் பால் வைத்து, குடிக்க செய்து வளர்க்கலாம்.
நன்மைகள்
கறவையின் போது கன்றுகள் இறந்தால் தாய் மாடுகள் கறவைக்கு நிற்காது.
மேலும் தாய் மாடு இறந்தால் கன்றுகள் பால் குடிக்க சிரமப்படும்.
தாயிடமிருந்து பிரித்து வளர்ப்பதால் இந்த பிரச்சனை ஏற்படாது. இந்த முறையினால் கன்றுகள் தீவனம் விரைவாக எடுத்துக்கொண்டு, விரைவில் பருவமடையும்.
கன்றுகளை பிரித்து வளர்ப்பதால் அவற்றிற்கு தேவையான பாலினை அளந்து கொடுக்கலாம். இதனால் வளர்ப்புச்செலவு குறையும்.
பிரித்து வளர்ப்பதால் கன்றுகள் உயரிய தீவனத்தை எடுத்துக்கொண்டு விரைவில் வளர்ச்சியடையும்.
கருத்துகள் இல்லை