இந்நோயானது மாடுகளின் மடிக்காம்பு பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. மேலும் பால் கறவை காலத்தில் இருக்கும் மாடுகள் பொதுவாக இந்நோயினால் அதிக பாதிப்பு அடைகிறது. நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் நிறத்திலோ அல்லது தன்மையிலோ எந்தவித மாறுபாடும் இருக்காது. இந்நோயினால் பால் உற்பத்தி குறையும். சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோய் பாதிக்கப்பட்ட காம்புகள் முற்றிலும் சேதமடைந்துவிடும்.
அறிகுறிகள்
நோய் பாதிக்கப்பட்ட மாட்டின் காம்பு மிகவும் சிவந்து மற்றும் வீங்கியும் காணப்படும். இதனால் பால் உற்பத்தி குறைந்து காணப்படும். அதிகப்படியான நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மாட்டின் காம்பு சேதமடைந்து காணப்படும்.
தடுப்பு முறைகள்
மாடுகள் இருக்கும் இடம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
மாட்டுப் பண்ணையின் தரையை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். பால் கறப்பதற்கு முன்பாக பால் கறப்பவர் கைகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.
பால் கறக்கும் போது காம்புகளை கிருமி நாசினி கலந்த கரைசலில் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மடிக்காம்புக்குள் கிருமிகள் செல்வதை கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் மாட்டின் காம்புகளில் காயங்கள் ஏற்படாமலும், புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும்.
நோய் பாதிக்கப்பட்ட மாட்டை உடனே கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை