தொண்டை அடைப்பான் நோயானது பெரும்பாலும் மழைக்காலத்தில் நீர் பாசனம், வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ள இடங்களில் காணப்படுகிறது. இந்த நோயானது கறவை மாடுகள் குறிப்பாக எருமை மாடுகளை, இந்நோய் அதிக அளவு தாக்குகிறது.

                இந்த நோய் தூரப்பயணத்திற்குப் பின்பும் அதிக நேரம் குளிர் மற்றும் மழையின் பாதிப்பிற்கு பின்பும் ஏற்படுகிறது. இந்நோயால் அதிகளவில் கலப்பின பசுக்கள் பாதிக்கப்படுகின்றன.

அறிகுறிகள்

                இந்த நோய் தாக்கினால் கடுமையான காய்ச்சல் ஏற்படும் மற்றும் கண்கள் சிவந்து வீங்கிக் காணப்படும்.

                இதனால் தலை, கழுத்து, தொண்டை, மார்பு போன்ற பகுதிகளில் வீக்கம் ஏற்படும். வீக்கம், வலியோடு கூடியதாக காணப்படும்.

                குடற்பகுதி பாதிக்கப்பட்டால் வயிற்றுப் போக்கு காணப்படும். சாணம் இளகி இரத்தம் கலந்திருக்கும். மேலும் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும்.

               மாடுகளின் வாயிலிருந்து மிகுதியான உமிழ்நீரும் வழிந்து கொண்டே இருக்கும். மாட்டின் நாக்கு தடித்துக் கறுப்பாகி விடும், இதனால் மாடுகள் எதையும் விழுங்காமல், மூச்சு விடவும் முடியாமல் திணறும்.

தடுப்பு முறைகள்

               கால்நடைகளுக்கு மழைக்காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தடுப்பூசி போட வேண்டும். நோய் தாக்கிய கால்நடையை மற்ற மாடுகளிடமிருந்து பிரித்து, தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும்.

               பொதுச் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படவேண்டும். தொடக்க நிலையில் ஏற்ற மருத்துவம் செய்வதால், பாதிக்கப்பட்ட மாடுகளைக் காப்பாற்றிவிடலாம்.

தொண்டை அடைப்பான் அறிகுறிகள் | தடுப்பு முறைகள்

கருத்துகள் இல்லை