பூர்வீகம்
இது தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் தோன்றிய மாட்டினமாகும்.
நிறம் மற்றும் தோற்றம்
ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக காணப்படுகின்றன. பசு மாடுகள் சாம்பல் நிறத்துடனோ அல்லது வெள்ளை நிறத்துடனோ காணப்படும்.
இந்த வகை மாட்டினம் பின்புறம் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும். ஆலம்பாடி மாடுகள் உயரமானவையாகும். பால் கொடுக்கும் சக்தி மிகமிகக் குறைவு.
பயன்பாடு
இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கருத்துகள் இல்லை