கர்ப்பிணிகளுக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் பிரச்சினையாலோ மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தை குறைந்துக்கொள்வது மிகவும் நல்லது.
உடல் சோர்வு, பதற்றம், கவனக்குறைவு, தேவையின்றி ஏற்படும் பயம், எதிலும் விருப்பம் இல்லாமல் இருப்பது, அதிகமாக எரிச்சலடைவது, தூக்கமின்மை, குற்றவுணர்ச்சி, சோகமாக இருப்பது, அதிகப்படியான எடை அதிகரிப்பு அல்லது குறைவது, உணவு சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்ற பல அறிகுறிகள் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப குறைந்தபட்சம் இருபது நிமிடங்களாவது நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மயக்கம் மற்றும் வாந்தி வராமல் இருக்க ஸ்வீட்டுக்கு போடும் கிஸ்மிஸ் பழம் நிறைய சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும். மயக்கமாக இருந்தால் குளுக்கோஸ், ஹார்லிக்ஸ் போன்றவை குடிக்கலாம்.
கருத்துகள் இல்லை