தமிழர்களின் வாழ்வானது மானம் மற்றும் வீரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அவ்வகையில் நம் பராம்பரியத்தில் மானம் மற்றும் வீரத்தையே உயிரினும் மேலாக கருதுகின்றனர். வீர விளையாட்டுகளில் ஒருவரால் செய்ய முடியாத காரியத்தை, வேறொருவர் செய்வதை தான் வீரம் என்று போற்றி வந்தனர்.

              அந்த வகையில் தனது வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வீரர்களைப் பாராட்டி வெகுமதியும் அளித்து கவுரவித்தனர். மேலும் பண்டைய தமிழர்கள் தங்களது வீரத்தை நிரூபிக்க காளைகளை அடக்குவதை தான் முக்கிய வீர விளையாட்டாக கருதினர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டானது மிகவும் சிறப்பாக நடைபெறும்.

              தை திருநாளானது நாணயம் போல் இரு பக்கங்களாக கருதி, அதன் ஒரு பக்கம் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையும், மற்றொரு பக்கம் ஜல்லிக்கட்டு விளையாட்டும் இடம் பெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு வரலாறு

               ஏறுதழுவுதல் என்பதே இதன் அழகான வார்த்தையாகும். காலப்போக்கில் சல்லிக்கட்டு என்று மறுவி ஜல்லிக்கட்டு என மாறியதாகவும் கூறப்படுகிறது. அதாவது, ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் இருந்தே, அவர்களது நாணயங்களான சல்லிக் காசுகளை ஒரு துணியில் முடிந்து காலையின் கொம்பில் கட்டிவிடுவார்கள்.

               காளையை அடக்குபவர்கள் அந்தக் காலையின் கொம்பில் கட்டப்பட்டு இருக்கும் சல்லிகாசை எடுத்துக் கொள்ளலாம். இதுவே பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மறுவியதாகவும் கூறப்படுகிறது.

               இந்த வீர விளையாட்டிற்கு மேலும் சில சிறப்பு பெயர்கள் உள்ளது. அதில் மாடு பிடித்தல், ஏறுதழுவல், ஏறுகோள், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, பொல்லெருது பிடித்தல் போன்ற பெயர்களுடன் சிறப்பு பெற்றது.

               அதுமட்டுமல்லாமல் பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.

               மனிதனைக் கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

                மேலும் புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என வரலாறு தெரிவிக்கின்றன.

ஜல்லிக்கட்டு வகைகள்

வடம் ஜல்லிக்கட்டு

                  வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வதாகும்.

வாடி மஞ்சு விரட்டு

                வாடி மஞ்சு விரட்டு என்பது ஒரு திறப்பின் வழியாக வெளியேவரும் காளையை பிடித்துக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும். அதன் பிடியை விடக் கூடாது. தமிழ்நாட்டில் மிக பிரபலமான மதுரையின் பாலமேட்டில் இந்த மாதிரியான ஜல்லிக்கட்டு விளையாட்டு பிரபலமாக உள்ளது.

வெளிவிரட்டு

                தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கையில் பிரபலமான ஊர்களில் இன்னொருவகை காளை விளையாட்டு வெளிவிரட்டாகும். இதில் காளை திறந்த மைதானத்துக்குள் அனுப்பப்படும். காளை கயிறால் கட்டப்படுவதோ, குறிப்பிட்ட பாதையில்தான் செல்லவேண்டுமென்ற நிபந்தனையோ இருக்காது.

ஏறுதழுவுதலுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் உள்ள வேறுபாடு

               ஏறு தழுவுவதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது ஜல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல்வேறு மக்களும் பங்கேற்கிறார்கள்.

               இருப்பினும் ஜல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. ஜல்லிக்கட்டில் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது.

               ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது.

தமிழர்களின் கலாச்சாரம்

               ஜல்லிக்கட்டு நம் தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சார வீர விளையாட்டுகளின் அடையாளம். இது நம் மரபை சந்ததியினருக்கும் எடுத்து சொல்லி புரிய வைக்க கூடிய ஒன்று. இது அவசியத்தையும், அத்தியாவசியத்தையும் கட்டாயம் எடுத்து சொல்ல வேண்டும்.

               இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். காளைகளை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.

               ஜல்லிக்கட்டு காளைகள் மேள தாள சத்தங்களுக்கிடையே விளையாட்டுக்கென உள்ள மைதானத்தில் சீறிப்பாயும். மேலும் ஜல்லிக்கட்டு மாட்டின் கழுத்தில் பணமுடிப்பு கட்டப்பட்டிருக்கும். மாட்டை அடக்கி பிடிக்கும் இளைஞர்கள் அந்த பண முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். மாட்டின் உரிமையாளரின் வசதிக்கேற்ற பரிசு பொருட்களும் வித விதமாக வழங்கப்படும்.

               தாரை, தப்பட்டைகள் வாத்திய ஓசைகள் முழங்க சீறிப்பாயும் காளையை அடக்குவதற்கென்று பல இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்குவார்கள்.

               இவ்வாறு ஜல்லிக்கட்டின் போது அடக்கப்படும் காளைகள் விவசாயத்திற்கும் பயன்படுத்துவார்கள். மேலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைகளை மீண்டும் போட்டிக்கு தயார் செய்வார்கள்.

               ஜல்லிக்கட்டானது பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெற்று வருகிறது.

காளைகளுக்கு பயிற்சி அவசியமா?

                ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்காக என பிரத்யேகமாக வளர்க்கப்படும் முரட்டுக்காளைகளுக்கு, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றது.

                ஜல்லிக்கட்டு காளைகளை காலையில் இரண்டு மணி நேரம் நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சிகளில் ஈடுபடுத்துகின்றனர்.

               முறையான பயிற்சி எடுக்கும் காளைகள் மட்டுமே திமிலை பிடித்து திமிரை அடக்க வரும் கட்டிளங் காளையர்களை ஆடுகளத்தில் பந்தாடுவதுடன், மாடு பிடி வீரர்களின் கையில் பிடிபடாமல் பரிசினை பெறுகிறது.

காளைகளுக்கு ஏற்ற உணவு

               ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகளுக்கு சத்தான உணவு வழங்குவதால் ஜல்லிக்கட்டு போட்டியில் சளைக்காமல் நின்று பரிசுகளை வெல்லும்.

               எனவே காளைகள் திடகாத்திரமாக இருப்பதற்காக காளைகளுக்கு கம்பு, கோதுமை, மக்காச்சோளம், உளுந்து பொட்டு, பாசிப்பயிறு பொட்டு, பருத்தி கொட்டை என அனைத்தையும் கலந்து உணவாக கொடுக்க வேண்டும்.

               உலர் தீவன புற்களுடன், பசுந்தீவனத்தையும் கலந்து கொடுக்க வேண்டும். பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

மாடுபிடி வீரர்கள்

                ஜல்லிக்கட்டில் கலந்துக்கொள்ளும் மாடுகளுக்கு பயிற்சி வழங்குவது போல, மாடு பிடி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

                முக்கியமாக தென்னைமரம் ஏறும் பயிற்சியில் ஈடுபட்டால் கால் தசைகள், மூட்டுகள் இலகுவாகும். கைகள் சொரசொரப்பாகும். மேலும் காளையின் கொம்புகள், திமிலை இருக்கமாக பிடித்துக்கொள்ள உதவும்.

ஜல்லிக்கட்டு !!

கருத்துகள் இல்லை