இந்நோய் வைரஸால் ஏற்படும் நோயாகும். கொசு மற்றும் பூச்சிகள் இந்நோயினை பரப்பும் காரணியாக செயல்படுகிறது. 6 மாதம் மற்றும் 2 வயது மாடுகள் அதிகம் இந்நோயினால் பாதிக்கிறது. இந்நோய் காற்றின் மூலம் பரவுகிறது. ஆனால் சளி, எச்சில் மூலம் பரவுவதில்லை.
அறிகுறிகள்
மாடுகளின் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். உடல் நடுக்கம் அடையும்.
மாடுகள் தீவனம் எடுத்துக்கொள்வது குறையும், அதனால் பாலின் அளவு குறைகிறது.
பாதிக்கப்பட்ட மாடுகளில் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டு இருக்கும். உழிழ் நீர் வாயில் அதிகப்படியாக சுரக்கும்.
மாடுகள் நடப்பதற்கு சிரமப்படும். சில சமயங்களில் முடியாமல் படுத்துக்கொள்ளும்.
மாடுகள் அசைப்போடுவதற்கு சிரமப்படும்.
தடுப்பு முறைகள்
நோயைப் பரப்பும் கொசு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நோய் வருவதைக் குறைக்கலாம்.
மாட்டுப்பண்ணையையும் அதனைச் சுற்றி உள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை