சினைப்பசுவை நன்றாக பராமரித்தால் தான் அதன் கருப்பையில் வளரும் கன்று ஆரோக்கியமாக இருக்கும்.
சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காகவும், பால் உற்பத்திக்கு தேவையான சத்துகளை உடம்பில் சேமிக்கவும் தீவனங்களை சத்தானதாக கொடுக்கவேண்டும்.
முதல் மூன்று மாதமும் கடைசி மூன்று மாதமும் தான் கரு நன்றாக வளர்ச்சி அடையும். அதனால் 7 மாதம் முடிந்தவுடன் சினை பால் கறப்பதை நிறுத்திவிட வேண்டும். 25 கிலோ பசுந்தீவனம், 4 கிலோ உலர் தீவனம், 3 கிலோ அடர்தீவனம் மற்றும் 30 கிராம் சாப்பாட்டு உப்பு கொடுக்கவேண்டும்.
சுத்தமான தண்ணீர் கொடுக்கவேண்டும்.
தரை வழுவழுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும்.
மாடுகளை அதிக தூரம் மற்றும் மேடு பள்ளம் நிறைந்த பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். சமமான பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவதன் மூலம் சினை மாடுகளுக்கு உடற்பயிற்சி கிடைக்கும்.
கன்று ஈனும் காலம் நெருங்கும்போது, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது மற்றும் மற்ற மாடுகளிலிருந்து பிரித்து தனியாகத் தூய்மையான காற்றோட்டமான கொட்டகையில் கட்டவேண்டும்.
கொட்டகையில் வைக்கோலை பரப்பி வைப்பது இன்னும் சிறப்பாகும்.
சினைமாடுகளை அடிக்க மற்றும் பயப்படுத்தக் கூடாது.
சினைமாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
சினை பசுக்களை மழை, வெயில் மற்றும் குளிரிலிருந்து பாதுகாக்கவேண்டும்.
சினையுற்றிருக்கும் மாடுகளை ஏற்கனவே கன்று வீச்சு ஏற்பட்ட மாடுகள் அல்லது கன்று வீச்சு நோய்களால் பாதிக்கப்பட்ட மாடுகளிடம் ஒன்றாக இருக்க அனுமதிக்கக்கூடாது.
மாட்டிற்கு சினை ஊசிப்போட்ட நாள் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
கன்று ஈனுவதற்கு முன்பாக சில சினை மாடுகளில் மடி அதிகமாக வீங்கிக் காணப்படும். இவ்வாறு அதிகமாக வீங்கி இருந்தால் மடியிலிருந்து பாதிப் பாலைக் கறந்துவிட வேண்டும்.
கருத்துகள் இல்லை