நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.
படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.
ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.
அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
நவராத்திரி அன்று கொலு பொம்மைகளை எந்தெந்த படி நிலைகளில் எப்படி அடுக்கவேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.
கீழிருந்து முதல்படி: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை இடம்பெறச் செய்யலாம்.
2ம் படி: நத்தை, அட்டை முதலிய மெல்ல ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்கள்.
3ம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்கள்.
4ம் படி: பறவைகள் முதலானவை.
5ம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்கள்.
6ம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன் குறத்தி முதலான பொம்மைகள்.
7ம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகள்.
8ம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகள் இடம்பெறலாம்.
9ம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.
கருத்துகள் இல்லை