புல் வலிப்பு நோய் ஒரு உயிர்க்கொல்லி நோய் ஆகும். இந்நோயை "கோதுமைப் புற்கள்" நோய் என்றும் அழைப்பார்கள். கால்நடையின் இரத்தத்தில் உள்ள மெக்னீசியம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோய் இளங்கன்றின் பால் ஊட்டத்தைக் குறைக்கிறது. எல்லா வயது மாடுகளையும் இந்நோய் தாக்கும். வளர்ச்சியடையாத புற்களை மேய்வதால், மாடுகள் இந்நோயால் பாதிக்கப்படுகிறது. வசந்த மற்றும் குளிர்க்காலங்களில் இது அதிகம் பரவுகிறது.
அறிகுறிகள்
இந்தக் நோயை கவனிக்காமல் விட்டால் மாடு கோமாவால் பாதிக்கப்பட்டு இறக்கும் வாய்ப்பு உள்ளது. 4 மாதத்திற்கும் குறைவான வயதுடைய கன்றுகளுக்கு இந்நோயைத் தாங்கும் சக்தி கிடையாது.
எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.
தடுப்பு முறைகள்
கால்நடைத் தீவனத்தில் எல்லாச் சத்துக்களுடைய உரங்களை சரிவிகிதமாக இருக்குமாறு இடவேண்டும். எதிர்ப்புச் சக்தி வாய்ந்த மாடுகளை இது போன்ற புல்வளர்ந்த இடங்களில் மேய விடலாம். மேய்ச்சல் நிலங்களில் அதிக மெக்னீசியம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த உரங்களை இடவேண்டும்.
கருத்துகள் இல்லை