காலை நேரம் இட்லி, தோசை, சப்பாத்தி அல்லது அதற்கு இணையான சத்துத் தரும் ஓட்ஸ் அல்லது சம்பா கோதுமை உப்புமா (தலா 1/2 கப்) என்று ஏதாவது ஒரு உணவு வகைகளை அளவோடு சாப்பிடலாம்.

              மதிய உணவுக்கு சாதத்துடன் காய்கறி, ஏதேனும் ஒரு கீரை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன் மற்றும் மீன் என்று ஏதாவது ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம். மதிய உணவுக்கு எண்ணெயில் பொரித்தவற்றை தவிர்க்கவும்.

              மாலை வேளையில் பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை என்று ஏதேனும் முளைகட்டிய பயறு வகை ஒன்றை வேக வைத்து டிபனாக சாப்பிடலாம். ஆறாவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து மற்றும் கால்சியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

              இரவு நேர உணவாக காலையில் எடுத்துக் கொண்ட அதே மாதிரியான, அதே அளவிலான உணவையே எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வேளையும் சாப்பிட்ட பின்பு பழங்கள் மற்றும் ஜீஸ் வகைகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஜீஸ் குடிப்பதை விட முழு பழமாக சாப்பிடுவதில் தான் சத்துகள் நிறைந்துள்ளது. எண்ணெயைப் பொறுத்த வரை, தினமும் மூன்றிலிருந்து நான்கு தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம்.

              சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஜெஸ்டேஷனல் டயபடிஸ் பிரச்சினை ஏற்படலாம். எனவே, அந்தப் பெண்கள் பால், காபி வகைகளில் சர்க்கரையை தவிர்த்து, இடைப்பட்ட நேரங்களில் மோருடன் வெள்ளரி, மாங்காய் அல்லது காய்கறி சூப் எடுத்துக் கொள்ளலாம்.

எடையின் அளவு

                கர்ப்ப காலத்தில் அதிகரிக்க வேண்டிய எடையை விட கூடுதலாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ எடை இருக்க கூடாது.

                சராசரி எடை கொண்ட பெண்கள் 10 முதல் 16 கிலோகிராம் வரை எடை கூடலாம். முதல் மூன்று மாதங்களில் 1 முதல் 1.5 கிலோ, அடுத்த மூன்று மாதங்களில் 5 முதல் 7 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். இறுதி மூன்று மாதங்களில் 2 முதல் 3 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.

              உடல் பருமனான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கிலோ வரை எடை அதிகரிக்கலாம். உடல் எடை மிகவும் குறைவாக உள்ள பெண்கள் கரிப்ப காலத்தில் 12 முதல் 18 கிலோ வரை எடை ஏறலாம்.

              கர்பிணிப் பெண்கள் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எடையில் மிகவும் அதிகரித்தாலோ அல்லது சரியாக அதிகரிக்காமல் இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதுவும் உணவை மூன்று வேளையாக மட்டும் சாப்பிடாமல் 6 வேளையாக பிரித்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்ப காலத்தின்போது உணவு உண்ணும் முறைகள்

கருத்துகள் இல்லை