மாடுகளுக்கு சினைப் பருவத்தின் கடைசி மாதத்தின் போதோ, கன்று ஈன்ற பின்போ கருப்பை வெளியே வர வாய்ப்பு உண்டு. இதற்கு காரணம் அதிக தீவனம் மற்றும் தண்ணீரை ஒரே நேரத்தில் கொடுப்பது தான்.
மாடுகள் படுத்திருக்கும் பொழுது பின்புறம் சற்று உயரமாகவும், முன்புறம் சற்று பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால் மண் மற்றும் தூசுகள் படாத இடத்தில் கட்ட வேன்டும். கருப்பை உலர்ந்துவிடாமல் இருக்க சுத்தமான ஈரத்துணியை போர்த்தி வைத்து மருத்துவரை உடனடியாக அழைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை