பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "காணும்" பொங்கல்.
அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
காணும் பொங்கல் அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம்.
சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழ்ந்தது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் "சீரியல்" உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது.
இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் நல்லதொரு சபதமேற்போம்.
கருத்துகள் இல்லை