பசுந்தீவன குறைபாட்டை ஈடு செய்ய மண் இன்றி, தட்டுகளில் தானியங்களை முளைகட்டி தேவையான தண்ணீர் தெளித்து வளர்க்கப்படுவது ஹைட்ரோபோனிக் தீவனங்களாகும்.
தீவன பற்றாக்குறையை போக்கும் ஹைட்ரோபோனிக்ஸ்
கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு தீவன பற்றாக்குறையை போக்கும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ் முறை பயன்படுகிறது.
வறட்சியிலும் வளர்ந்து பலன் தரும் தீவனத்திற்கு இந்த முறை பயன்படுகிறது.
இதன் மூலம் தீவனத் தட்டுப்பாடு மற்றும் மழை இல்லாததால் வளர்ச்சி இல்லாமை போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை.
நிலம் இல்லாதவர்களும் இந்த முறையில் தீவனங்களை வளர்த்து பயன் பெறலாம்.
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற தீவனப்பயிர்களை வளர்க்கலாம்.
வளர்ப்பு முறை
வளர்க்கப்பட வேண்டிய பயிர்களின் விதைகளை ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து விதைகளை எடுத்து, உலர விட வேண்டும்.
அதன் பிறகு ஒரு ஈரமான சாக்கில் விதைகளை போட்டு கட்டி வைக்க வேண்டும். முளைப்பு வந்தவுடன் வளர்க்க வேண்டிய தட்டுகளில் போட வேண்டும். பிறகு 8 நாட்களில் 1 அடி வளர்ந்திருக்கும். அதன் பிறகு அவ்வபோது சிறிதளவு தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
1 கிலோ விதையிலிருந்து 8 கிலோ வரை தீவனத்தை உருவாக்கி கொள்ளலாம்.
பயன்கள்
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்த்த தீவனத்தை மாடுகளுக்கு கொடுப்பதனால் அவற்றின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
இந்த தீவனத்தில் புரதம் அதிகம் இருப்பதால் பால் அதிகம் கறக்கும். இதனால் மாடுகளில் சினை பிடிக்கும் தன்மையும் அதிகரிக்கும்.
இதனை உற்பத்தி செய்ய குறைவான தண்ணீரும், குறைந்த இடவசதியும் போதுமானது. அதிக நீர்ச்சத்தும் குறைவான நார்சத்தும் கால்நடைகளுக்கு கிடைக்கின்றன.
கருத்துகள் இல்லை