தேவையான பொருட்கள் :
* தொய்யக்கீரை1 கட்டு
* பாசி பருப்பு அரை கப்
* சிறிய வெங்காயம்10
* பச்சை மிளகாய் 2
* உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
* பூண்டு பல் 3
* தக்காளி1
* கடுகுகால் டீஸ்பு+ன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* உப்பு தேவைக்கேற்ப
* கறிவேப்பிலை1 கொத்து
* காய்ந்த மிளகாய்1
* சீரகம் 1 டீஸ்பூன்
செய்முறை :
கீரை, பாசி பருப்பு, சிறிதளவு வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, சீரகம் எல்லாம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
பின் எடுத்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கிய பின் அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு வதக்கி பின் மசித்து வைத்த கீரை கலவையை சேர்க்கவும்.
உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை