கோடைகாலத்தில் அதிகமாக இந்நோய் மாடுகளுக்கு ஏற்படுகிறது. அம்மைக் கொப்புளங்கள் சிறியதாக இருக்கும் போது சரியாகக் கவனித்து மருத்துவம் செய்யாவிட்டால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
அறிகுறிகள்
மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்படும்.
மாடுகளின் காம்புகளில் கொப்புளங்கள் தோன்றி மாடுகளுக்கு வலியைத் தருகிறது.
தடுப்பு முறைகள்
பாதிக்கப்பட்ட மாட்டை தனிமைப்படுத்த வேண்டும். மாடுகள் இருக்கும் கொட்டகையை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
மாடுகளுக்கு மாட்டம்மை தடுப்பூசி போட வேண்டும்.
பால் கறக்கும் போது மடிகள் மற்றும் பால் கறக்கும் கருவி அல்லது கைகளை நன்றாக சுத்தம் செய்து பின் பால் கறக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை