இரகம்
கோ1, கோ2, கோ3, கோ4, கே.கே.எ1
மண்
ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம்.
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு அடியுரமாக 10 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
தேவையான கரணைகள்
ஒரு ஏக்கருக்கு 14,000 கரணைகள் தேவைப்படும். 3 அடி X 3 அடி என்ற இடைவெளியில் கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
நீர் மேலாண்மை
வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
உரம்
200 லிட்டர் நீரில் 10 கிலோ சாணம், 10 லிட்டர் மாட்டுக் கோமியத்தை கலந்து ஒரு நாள் வைத்திருந்து பாசனநீரில் கலந்து விடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பஞ்சகாவ்யா கரைசல் மற்றும் அமிர்தகரைசலை தொடர்ந்து மாறி மாறி தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் இருக்காது. மேலும் நல்ல தரமான பசுந்தீவனம் கிடைக்கும். கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.
அறுவடை
70 - 80 நாட்களில் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த 40 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டர் நிலத்தில் 8-10 மறுதாம்பு பயிர்களில் இருந்து 300- 400 டன் பசுந்தீவனம் கிடைக்கும். 8 -10 ஆண்டுகள் வரை மறு தாம்பு பயிர் அறுவடை செய்யலாம்.
கருத்துகள் இல்லை