முதல் மாதம்:
* கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும்.
* சிசு மூன்று பாகங்களாகத் தெரியத் தொடங்கும்.
* முதல் பாகம் மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது.
* இரண்டாம் பாகம் சுவாசக் கட்டமைப்பு, வயிறு.
* மூன்றாம் பாகம் இதயம், ரத்தம், தசை, எலும்புகளாக மாறும்.
இரண்டாம் மாதம்:
* சிசுவிற்கு முகம் உருவாகும்.
* கண் பகுதி குழி தோன்றும்.
* மூளை, இதயம், சுவாசப்பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்க ஆரம்பிக்கும்.
* இதயம் மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கும்.
மூன்றாம் மாதம்:
* உடலை விட இப்போது தலை பெரியதாக காணப்படும்.
* நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும்.
* அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறிய முடியும்.
நான்காம் மாதம்:
* தலை முடி, புருவம் போன்றவை லேசாக வளர்ந்திருக்கும்.
* கண்கள் மூடி இருக்கும்
ஐந்தாம் மாதம்:
இந்த மாதத்தில் தான் தாய் முதல் முறையாக தன் சிசுவின் அசைவை உணர்வாள்.
"லாலுனுகோ" என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் மூடப்படும்.
பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.
ஆறாம் மாதம்:
* சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும்.
* சருமம் கெட்டியாக இருக்கும்.
* "வெர்னிக்ஸ்" குழந்தையை பாதுகாப்பாய் மூடிக் கொள்ளும்.
* ஆம்னியாட்டிக் திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும்.
* குழந்தையின் விக்கலை அம்மாவால் உணர முடியும்.
ஏழாம் மாதம்:
* இந்த மாதத்தில் குழந்தை கண் திறக்கும்.
* எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.
எட்டாம் மாதம்:
* நகம் வளர ஆரம்பிக்கும்.
* முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
* கருப்பை வாயை நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.
ஒன்பதாம் மாதம்:
* ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும்.
* எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும்.
* பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.
கருத்துகள் இல்லை