தேவையான பொருட்கள் :
* பூண்டு அரை கிலோ
* வெந்தயம் ஒரு டீஸ்பூன்
* சீரகம் 1 டீஸ்பூன்
* கடுகு கால் டீஸ்பூன்
* கறிவேப்பிலை 3 கொத்து
* எண்ணெய் தேவைக்கேற்ப
* இஞ்சி விழுது 1 டீஸ்பூன்
* பெருங்காய பொடி 6 சிட்டிகை
* எலுமிச்சை சாறு கால் டீஸ்பூன்
* மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
செய்முறை :
சிறிய அளவுடைய பூண்டை மேல் தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உரித்த பூண்டுகளைப் போட்டு உப்பைச் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்து கலக்கி மூடி வைத்து குறைந்தது இரண்டு நாளைக்கு ஊறவிடவும்.
பின்பு ஊறுகாயை தாளிக்கும் போது மிளகாய்தூளைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்து கடுகைப் போட்டு நன்கு தாளிக்கவும், பின்பு சீரகம், வெந்தயத்தைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
பின்பு மஞ்சள்தூள், பெருங்காயத்தூளைச் சேர்த்து கலக்கவும். அதனுடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு உடனே பூண்டு கலவையைக் கொட்டி கிளறி அடுப்பை நிறுத்திவிடவும்.
அப்படியே வாணலியில் ஊறுகாயை நன்கு ஆறவிட்டு மீண்டும் அதே பாத்திரத்தில் போட்டு மூடிவைக்கவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தினால் சுவை நன்றாக இருக்கும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை