தேவையான பொருட்கள் :
* உதிரியாக வடித்த சாதம் 1 கப்
* புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
* காய்ந்த மிளகாய் 3
* பச்சை மிளகாய் 2
* மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
* பெருங்காயம் ஒரு சிட்டிகை
* சிறிய வெங்காயம் 10
* எண்ணெய் தேவைக்கேற்ப
* வேர்க்கடலை கால் கப்
* எள் 1 டீஸ்பூன்
* எண்ணெயில் வறுத்து பொடியாக்கவும் :
* காய்ந்த மிளகாய் - 4
* உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 2 டீஸ்பு+ன்
தாளிக்க :
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* முந்திரிபருப்பு - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
புளியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எள்ளை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் போட்டு வறுத்து அதை மிக்சியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தைச் சேர்த்து பின் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் கருப்பாக வதங்கியதும் வெங்காயத்தை போடவும். அதன் பிறகு கரைத்த புளியை ஊற்றவும். பின் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
புளிச்சாறு கொதித்து கெட்டியாகும் வரை கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வேர்க்கடலையை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
உதிர்த்த சாதத்தை புளிச்சாறுடன் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணையில் வறுத்து இதன் மீது ஊற்றவும்.
தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த மிளகாய்ப் பொடி சேர்த்து கலக்கி பரிமாறலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனுடன் உருளைக்கிழங்கு, மசால் வடை, புதினா துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை