தேவையான பொருட்கள் :
* பப்பாளிக்காய் அரை காய்
* பயத்தம் பருப்பு அரை கப்
* மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
* உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
* பெரிய வெங்காயம்1
* பச்சைமிளகாய்1
அரைக்க:
* தேங்காய் துருவல் - அரை கப்
* சீரகம் - அரை டீஸ்பூன்
தாளிக்க:
* கடுகு - கால் டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
பப்பாளிகாய் தோல் மற்றும் விதையை நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைக்க வேண்டும். தேங்காய் துருவலுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பயத்தம் பருப்பு, நறுக்கிய பப்பாளிக்காய் துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, பப்பாளிக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.
அதில் அரைத்த தேங்காய், சீரகம் விழுதை போட்டு கிளறி விட வேண்டும். கூட்டு மிக கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம். தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்ட பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சப்பாத்தி, தோசை.
கருத்துகள் இல்லை