தேவையான பொருட்கள் :
* நூக்கல்2
* இஞ்சி பூண்டு பேஸ்ட்அரை டீஸ்பூன்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* மிளகாய் தூள், கரம் மசாலாஅரை டேபிள் டீஸ்பூன்
* சீரகம்கால் டீஸ்பூன்
* கெட்டி தயிர்அரை கப்
* பெருங்காயம்1 சிட்டிகை
* உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
* கடுகு1டீஸ்பூன்
* கிராம்பு4
* பட்டை1
* தாளிசபத்திரி1
* ஏலக்காய் 2
செய்முறை :
நூக்கலை தோல் சீவி வட்டமாக நறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து நூக்கலை பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கிராம்பு, பட்டை, தாளிசபத்திரி, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
அதனுடன் தயிர், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வேக விட வேண்டும். பின்பு நூக்கல், பெருங்காயம், கரம் மசாலா, உப்பு சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் தனியாக பிரியும் வரை அடுப்பில் இருக்க வேண்டும். சூடான நூக்கல் ஃப்ரை ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், ஃப்ரைடு ரைஸ்.
கருத்துகள் இல்லை