தேவையான பொருட்கள்:
* கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு
* தேங்காய் துருவல்1 கப்
* மிளகாய் வற்றல்2
* புளிநெல்லிக்காய் அளவு
* சிறிய வெங்காயம்10-15
* துவரம் பருப்பு1 கப்
* பச்சை மிளகாய்2
* தக்காளி3
* கடுகுஅரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை1 கொத்து
* பூண்டுப் பல்6
* மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
* சீரகத்தூள்அரை டீஸ்பூன்
* உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய், புளி, மிளகாய் வற்றல், சிறிய வெங்காயம், பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயினை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிடவும். பருப்பு வெந்த பிறகு அதில் கீரையை கொட்டி ஒரு கொதி நிலைக்கு வேகவிடவும். தேவையான உப்பை போட்டு மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்க வேண்டும்.
அரைத்த விழுதை கொட்டி கிளறவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வேக விடவும். மிகவும் கெட்டியான பதத்தில் இருக்குமானால் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக வெந்த பிறகு மற்றொரு கடாயில் கடுகு, கறிவேப்பிலையை போட்டு தாளித்து கீரை கூட்டில் கலந்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சாப்பிடுவதற்கு சுவையான கரிசலாங்கண்ணி கீரை கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம்.
கருத்துகள் இல்லை