தேவையான பொருட்கள் :
* அரிசி அரை கிலோ
* பிரண்டைகால் கிலோ (பொடியாக நறுக்கியது)
* காய்ந்த மிளகாய்3
* பச்சை மிளகாய்3
* மஞ்சள் தூள்1 டீஸ்புன்
* பெருங்காயத் தூள்1 டீஸ்புன்
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசியை கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
வதக்கியவற்றை நன்கு ஆற வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
குழைய வேக வைத்துள்ள சாதத்துடன், அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து கொள்ளவும்.
இதனை நன்றாக கலந்து, சிறிய நெல்லிக்காய் அளவுக்கு, சிறிது சிறிதாக ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, 4 அல்லது 5 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும்.
பின்னர்; ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், காய வைத்துள்ள வற்றலைப் போட்டு பொரித்தெடுத்தால் பிரண்டை வற்றல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பிரண்டை வற்றலை தயிர; சாதம், சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை