தேவையான பொருட்கள் :
* தூதுவளை 1 கப்
* பச்சரிசி அரை கப்
* புழுங்கல் அரிசி அரை கப்
* துவரம் பருப்பு கால் கப்
* உளுந்தம் பருப்பு கால் கப்
* கடலைப்பருப்பு கால் கப்
* பாசிப்பருப்பு கால் கப்
* பெரிய வெங்காயம் 3
* தேங்காய் துருவல்அரை கப்
* இஞ்சி ஒரு டீஸ்பூன் (துருவியது)
* காரட் ஒரு டீஸ்பூன் (துருவியது)
* மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
* வரமிளகாய் 4
* சோம்பு அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பைக் கழுவி ஒன்றாக ஊறவைக்கவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பைக் கழுவி ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
தூதுவளையை ஆய்ந்து கீரைகளை மட்டும் எடுக்கவும்.
மிக்ஸியில் முதலில் வர மிளகாய், சோம்பு, உப்பு போட்டு அரைத்து அதில் அரிசி, உளுந்தைப் போட்டு மிதமாக அரைக்கவும். அடுத்து பருப்பு வகைகளையும் மிதமாக அரைத்து எடுக்கவும்.
கடைசியில் தூதுவளையைப் போட்டு அரைத்து மாவில் சேர்த்து உப்பு மஞ்சள் பொடி போடவும்.
இஞ்சி, காரட் துருவல், தேங்காய் துருவல், பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு நன்கு கலக்கி ஐந்து நிமிடம் வைக்கவும்.
அதன் பின் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி எடுக்கவும்.
கருத்துகள் இல்லை