தேவையான பொருட்கள்:
* புளிச்சக்கீரை 1 கட்டு
* தேங்காய் துருவல்1 கப்
* பச்சை மிளகாய்2
* வெங்காயம்1
* மிளகாய் வற்றல் 2
* கடுகுஅரை டீஸ்பூன்
* புளிஎலுமிச்சை அளவு
* உளுத்தம்பருப்பு1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு1 டீஸ்பூன்
வறுக்க :
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* தனியா - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரை, புளியைப் போட்டு வதக்க வேண்டும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து விட வேண்டும்.
கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும். அதனுடன் வதக்கி வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
அரைத்து வைத்திருக்கும் சட்னியுடன் வதக்கியவற்றை போட்டு கலந்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை.
கருத்துகள் இல்லை