தேவையான பொருட்கள் :
* பூண்டு பல் 15
* புளி நெல்லிக்காய் அளவு
* கறிவேப்பிலை 2 கொத்து
* வெல்லம் 1 டீஸ்பூன்
* மிளகு 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
பூண்டினை தோலுரித்து வைக்கவும்.
புளியை தண்ணீரில் ஊற வைத்து இரண்டு கப் அளவிற்கு புளி கரைசலை எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு போட்டு தாளிக்கவும்.
அதன் பின்னர் அதில் தோலுரித்த பூண்டு பற்களைப் போட்டு பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
பூண்டு வதங்கிய பிறகு மிளகுடன் சேர்த்து இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். அதனுடன் புளிகரைசலை ஊற்றி, கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம் பின்னர் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பிறகு அதனுடன் புளி கரைசலை ஊற்றி, வாணலியை மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியாக ஆனதும் வெல்லத் தூளை போட்டு கிளறி விட்டு இறக்கிவிடவும். சுவையான பூண்டுக் குழம்பு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை