தேவையான பொருட்கள் :

               * சிவப்பு தண்டுக்கீரை 1 கட்டு

               * கடலை பருப்புகால் கப்

               * பாசிப்பருப்பு கால் கப்

               * சின்ன வெங்காயம் 10

               * தக்காளி 1

               * பூண்டு பல்2

               * மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * கடுகு அரை டீஸ்பூன்

               * உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்

               * உப்பு தேவைக்கேற்ப

               * தேங்காய் துருவல் அரை கப்

               * மிளகாய் வற்றல் 3

               * சீரகம் அரை டீஸ்பூன்

செய்முறை :

               கீரையை நன்கு தண்ணீர் வைத்து மண் போக அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

               பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கீரையை தண்டோடு நறுக்கி கொள்ளவும். வெங்காயம், பூண்டு பல், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

               ஊறிய பருப்பை மஞ்சள் தூள் சிறிது சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்து வைக்கவும்.

                கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும், கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

                பின்பு நறுக்கிய கீரை சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும். நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தேவைக்கேற்ப சிறிது உப்பு சேர்க்கவும்.

                வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும். ஒன்று சேர்ந்து கொதி வரும் போது அரைத்த தேங்காய் சேர்க்கவும். சிறிது நேரம் அடுப்பில் சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி இறக்கவும்.

                இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை தயிர் சாதம் மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

சிவப்பு தண்டுக்கீரை கூட்டு செய்முறை

கருத்துகள் இல்லை