தேவையான பொருட்கள்:
* பச்சைப் பயறுகால் கப்
* கடலைப் பருப்புஅரை கப்
* நூக்கல்1
* சின்ன வெங்காயம்2
* பச்சைமிளகாய்1
* மிளகாய்தூள்அரை டேபிள் டீஸ்பூன்
* மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
* தேங்காய் துருவல்அரை கப்
* கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
* உப்புதேவைக்கேற்ப
தாளிக்க:
* நல்லெண்ணெய் - 3டீஸ்பூன்
* கடுகு - அரை டீஸ்பூன்
* உளுந்து - அரை டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* பெருங்காயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
பருப்பை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு அது வேகும் அளவை விட சிறிது கூடுதலாக தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். சிறிது மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து மூடி வேக வைக்க வேண்டும்.
வெங்காயம், பச்சைமிளகாய், நூக்கல் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்க வேண்டும்.
பருப்பு பாதி வெந்தபிறகு நறுக்கி வைத்துள்ளவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து வேக வைக்க வேண்டும். காய் வெந்து கொண்டிருக்கும்போதே மிளகாய் தூளை சேர்த்து கிளறி விட வேண்டும். காய் வெந்து, நீர் வற்றியதும் தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை சேர்த்துக் கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது ஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொரியலில் கொட்டி கிளற வேண்டும். இப்போது நூக்கல் பொரியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தயிர் சாதம்.
கருத்துகள் இல்லை