தேவையான பொருட்கள் :

                 * காலிஃப்ளவர் 1

                 * வெங்காயம்2

                 * தக்காளி2

                 * கரம் மசாலா தூள்ஒரு டேபிள் ஸ்பூன்

                 * சில்லி தூள்ஒரு டேபிள் ஸ்பூன்

                 * தனியா தூள்2 டேபிள் ஸ்பூன்

                 * மஞ்சள் தூள்ஒரு டீஸ்பூன்

                 * உப்புதேவைக்கேற்ப

                 * ஃப்ரெஷ் க்ரீம்2 டீஸ்பூன்

                 * முந்திரி10

                 * பட்டை2

                 * கிராம்பு3

                 * ஏலக்காய்3

                 * கொத்தமல்லித் தழைஒரு கைப்பிடி

                 * வெண்ணெய் தேவைக்கேற்ப

                 * இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்

                 * எண்ணெய் தேவைக்கேற்ப

செய்முறை :

                  பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் காலிஃப்ளவரைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில்லாமல் வடிகட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

                  வாணலியில் எண்ணெய் ஊற்றி காலிஃப்ளவரைப் போட்டு, சிறிது இஞ்சி பூண்டு விழுது, அரை டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை டேபிள் ஸ்பூன் சில்லி தூள், ஒரு டேபிள் ஸ்பூன் தனியா தூள் மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.

                  அனைத்தும் ஒன்று சேரும்படி நன்றாக் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

                  அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, பாதி அளவு தக்காளியைச் சேர்க்கவும். பிறகு மீதமுள்ள தூள் வகைகளையும் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

                  நன்கு வதங்கியதும் கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

                  பிறகு மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, மீதமுள்ள வெங்காய்த்தைச் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரைச் சேர்த்து பிரட்டவும்.

                  அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி கொதிக்கவிடவும்.

                  நன்கு கொதித்ததும் ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.

                 காலிஃப்ளவர் மசாலா தயார்.

                 இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : பரோட்டா, சப்பாதிக்கு தொட்டுக் கொள்ளலாம்.

காலிஃப்ளவர் மசாலா செய்முறை

கருத்துகள் இல்லை