தேவையான பொருட்கள் :
* காசினி கீரை1 கட்டு
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன்
* கடுகு 1 டீஸ்பூன்
* மிளகாய்தூள் 1 டேபுள் ஸ்;பூன்
* மிளகாய் வத்தல் 3
* உப்புதேவைக்கேற்ப
* நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
* உளுந்தம் பருப்பு 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
* சீரகத்தூள் 1 டீஸ்பூன்
செய்முறை :
காசிணி கீரையை நன்றாக சுத்தம் செய்த பின் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கொதித்த பின் மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் போட்டு கிளற வேண்டும்.
கீரை நன்றாக வெந்த பின் மிளகாய் வத்தலை போட வேண்டும். இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.
கடாயில் நல்லெண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். அதை கீரையுடன் சேர்க்கவும்.
கீரை மணம் வீசும் போது தொக்கு தயார் ஆகிவிடும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசை உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை