தேவையான பொருட்கள் :
* காசினி கீரை1 கட்டு
* பச்சை மிளகாய் 3
* மிளகாய் வற்றல் 5
* கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
* மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
* சீரகத்தூள்1 டீஸ்பூன்
* புளி எலுமிச்சை அளவு
* உப்பு தேவைக்கேற்ப
* வெங்காயம் 3
* இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
வறுத்து அரைக்க :
* நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன்
செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
புளிக்கரைசல் கொதித்த பின்பு, கீரையை போட்டு கிளற வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது அதில் போடவும். கீரை வெந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லியை போடவும்.
பிறகு மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து மிளகாய் வற்றலையும் போட வேண்டும்.
சிறிது நேரம் கழித்து கீரை கடையலை இறக்கவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
பின் தாளித்ததை கீரையில் போட்டு கிளறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை