தேவையான பொருட்கள் :
* வெங்காயம் கால் கிலோ
* ரவை அரை கிலோ
* பச்சை மிளகாய் 8(பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் தேவைக்கேற்ப
* மைதா 100 கிராம்
* சீரகம் 4 டீஸ்பூன்
* முந்திரி 4
* இஞ்சி விழுது 1 டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* தோசை மாவு 3 கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ரவை, மைதா மாவு, சீரகம், உப்பு, முந்திரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு, அதில் தோசை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின், தோசை கல்லில் ஊற்றி மேலே வெங்காயம் பரவலாக தூவி, எண்ணெய் சுற்றி ஊற்றி, தோசை திருப்பிப் போடாமல், வெந்ததும் எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை