தேவையான பொருட்கள்:
* கரிசலாங்கண்ணி கீரை1 கட்டு
* சின்ன வெங்காயம்8
* மிளகாய் வற்றல்6
* பூண்டுப் பல்6
* தக்காளி3
* மிளகு, மஞ்சள், சீரகம்1 டீஸ்பூன்
* பெருங்காயம்1 சிட்டிகை
* எண்ணெய், உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
மிளகு, சீரகம் அரைத்து, அதனுடன் மஞ்சள், கீரை ஆகியவற்றை சேர்த்து வேகவைக்க வேண்டும்.
பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயைக் கிள்ளிப்போட்டு வதக்கி, வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கிய பின்பு, வேகவைத்து எடுத்த கீரையைக் கடைந்து அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு பெருங்காயம் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்புப் போட வேண்டும்.
கீரை நன்கு வெந்து கொதி வந்தவுடன் இறக்கி பருப்பு கடையும் மத்தால் கடைய வேண்டும். இப்போது கரிசலாங்கண்ணி கீரை கடையல் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம், தோசை
கருத்துகள் இல்லை