தேவையான பொருட்கள் :

                    * பப்பாளிக்காய் 1

                    * சின்ன வெங்காயம்10

                    * பச்சை மிளகாய்2

                    * தேங்காய் துருவல் முக்கால் கப்

                    * மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்

                    * சீரகப்பொடி கால் டீஸ்பூன்

                    * சோம்பு பொடிகால் டீஸ்பூன்

                    * மிளகாய் வற்றல்2

                    * கடுகுஅரை டீஸ்பூன்

                    * உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்

                    * கொத்தமல்லி1 கைப்பிடி

                    * கறிவேப்பிலை1 கொத்து

                    * உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :

                     பப்பாளிக்காயை தோல் நீக்கி கொள்ள வேண்டும். பொடியாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்க வேண்டும். வெங்காயம் பொடியாக நறுக்க வேண்டும். தேங்காய் துருவல், மிளகாய் மிக்ஸியில் திப்பியாக அறைத்து வைக்க வேண்டும்.

                     கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல், கருவேப்பிலை தாளித்து, வெங்காயத்தையும் வதக்கி, பப்பாளிக்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

                    சிறிது நேரம் மூடி போட்டு வேகவிட வேண்டும். மஞ்சள்தூள், சீரகப்பொடி, சோம்பு பொடி சேர்க்க வேண்டும். நன்கு பிரட்டி திரும்ப வேகவிட வேண்டும்.

                    காய் வெந்தவுடன் அரைத்த தேங்காய், மிளகாய் சேர்க்க வேண்டும். நன்கு பிரட்டி விட வேண்டும். நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும்.

                    சுவையான சத்தான பப்பாளிக்காய் பொரியல் ரெடி.

                       இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதம்.

பப்பாளி பொரியல் செய்முறை

கருத்துகள் இல்லை