தேவையான பொருட்கள் :
* வெங்காயம் 3 (நறுக்கியது)
* தக்காளி 2
* மிளகாய் தூள் முக்கால் டேபிள் ஸ்பூன்
* மல்லித்தூள் முக்கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - கால் டீஸ்பூன்
* சீரகம் - கால் டீஸ்பூன்
* உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
தக்காளியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
ரூnடிளிஅதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி பச்சை வாசம் போனதும், மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி விட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் அதை இறக்கி விடவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை