தேவையான பொருட்கள் :
* தூதுவளை இலை 15
* புழுங்கலரிசி 1 கப்
* மிளகு 10
* சீரகம் அரை டீஸ்பூன்
* பச்சை மிளகாய 2
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
* நெய் அரை டீஸ்பூன்
செய்முறை :
புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து, இதை அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி நெய், எண்ணெய் இரண்டையும் கலந்து அதை சுற்றிவர ஊற்றி, திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
கருத்துகள் இல்லை