தேவையான பொருட்கள் :
* மைதா மாவு கால் கிலோ
* நெய் 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் 2 கப் (நறுக்கியது)
* பச்சை மிளகாய் 2
* மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
* மல்லி தூள் கால் டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
* கரம் மசாலா கால் டேபிள் ஸ்பூன்
* சீரகம் அரை டீஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு அதை ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் பூரி போன்று வட்டமாக தேய்த்து, முக்கோண வடிவில் அதை வெட்டிக் கொள்ளவும். அதனுடன் வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, சமோசா வடிவில் செய்து கொள்ளவும்.
மறுபடியும் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான வெங்காய சமோசா ரெடி!!!
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை